கடவுள் எங்கே?
கடவுள் எங்கே ?
ஒருநாள் ஒரு மகரிஷிக்கு ஒரு விந்தனையான எண்ணம் ோன்றியது..கடவுள் என்பவர் யார்?அவரை எங்கே சென்றால் காணலாம் என...
அவர் கடவுளை எப்படியாவது காணவேண்டும் என உலகபயணம் மேற் ொண்டார்..உலகின் பல இடங்களில் பலவகையான வழிபாடுகளையும்,பலபெயர்களிலும்,பல உருவங்களிலும் கடவுளை வழிபடுவதைக் கண்டார்..ஆனாலும் அவரால் எங்கு சென்றும் கடவுளை காணமுடியவில்லை...
கடைசியாக ஒருமரத்தின் அடியில் அமர்ந்து "கடவுளே நீ எங்கே இருக்கிறாய்?!" என கூச்சலிட்டார்..
நீ நான் உன்னை தேடபே ாவதில்லை!என அந்த மரத்தின் அடியில் கண்ணை முடிக் ொண்டு அமர்கிறார்...கடவுளின் திருநாமத்தை அவர் மனம் உச்சரிக்க உச்சரிக்க நாள்கள் கடந்தன...பசி உண்ணவும் உறங்கவும் மறந்து கடவுளின் திருநாமத்தை மட்டுமே கூறினார்...
ஒருநாள் அவர் தன்மனதினை கடந்து உள்ளே செல்கிறார்...அவரின் மனம் முழுக்க கடவுளும் கருணை உள்ளமுமே இருந்தது...இறுதியில் கடவளை கண்ட அவர் தன்னுடைய ஊரிற்கு திரும்பினார்...
மக்கள் அனைவரும் அவர் வருகையை கெ ாண்டாட...அந்நாட்டின் மன்னன் கடவுளை கண்டீரா எனகேட்டார்...அதற்கு ரிஷி கண்டேன் எனக்கூற...மன்னனுக்கும் கடவுளை காண ஆசை வந்தது...அவர் எங்கே அவர் எங்கே என ஆச்சியத்தில் வினாவ...ரிஷி இங்கே என தன்னுடைய மார்பின்மீது கைவைத்துக் கூறினார்...
ஒன்றும் புரியாமல் தவித்த மன்னிடம் ரிஷி"கடவுள் என்பவன் வெ ளியே தேட வேண்டியவனல்ல...உன்னுள்தேட வேண்டியவன் "என தான் உணர்ந்ததை மன்னனுக்கும் மக்களுக்கும் உணர்த்தினார்...
கடவுள்=கட+உள்
உனக்குள் நீ.கடந்து சென்றால் இறைவனை காணலாம்...கடவுள் இந்த பிரபஞ்சத்தின் பிரதிஉருவம்...நம் மனம்தான் இந்த பிரபஞ்சத்தின் பிரதி பிம்பம்...
அவரை நீ வெ ளியே தேடத் தேவையில்லை...அதனால்தான் சித்தர்கள் கடவுளை எண்ணி தவம் செய்கின்றனர்...
கடவுள் என்பது நம் மனமே!அதை நீ எவ்வளவு தூய்மையாக வைக்கிறா ோ அவ்வளவு பயன்பெறுவாய்...அன்பையும் கருணையும் காட்டினால் நீயும் பிறர்க்கு கடவுளே....அன்பே இவ்வுளகில் சக்தி வாயந்த தெய்வம்...இதை நான் கூறவில்லை..என்னுடைய சாய்ராம் கூறினார்...
மனத்தூய்மை ஒன்றே இறைவனை காணும் வழி...அதை.தூய்மை படுத்துங்கள்...
-கெளதம்கவி



வணக்கம்!
ReplyDeleteநான், கடவுளை காண்பதற்காக சத்யலோகம் சென்ற என் பயண அனுபவத்தை, ஒரு கட்டுரை
வடிவில் எழுதியிருக்கிறேன். இதை நீங்கள் ஒரு முறையேனும் படிக்க வேண்டுகிறேன்!
நன்றி!
www.eppoluthu.blogspot.in