செவ்வாய்தோஷம் ஒரு ஆராய்ச்சி

     பல ஆண்டுகளாக அனைவராலும் பேசப்படுவதும், வெறுக்கப்படுவதும் இந்த செவ்வாய்தோஷம்தான்...
   
    பொருத்தம் பார்ப்பதற்காக சோதிடரிடம் சென்றால், அவர்கள் முதலில் கூறுவது செவ்வாய்தோஷம் இருக்கிறதா? இல்லையா? என்பதை பற்றிதான்..
     செவ்வாய்தோஷம் என்றால் என்ன? ஏன் செவ்வாய்தோஷத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது?
  பதில் இதோ....
           
      ஒருவரின் ஜாதக கட்டத்தில் ஜன்ம லக்னத்திற்கு 2-4-7-8-12 வீடுகளில் செவ்வாய் இருந்தால் செவ்வாய்தாஷம் என்கிறது சோதிட சாஸ்திரம்..
       அதிலுள்ள அறிவியல் என்னவென்றால்,
         செவ்வாய் என்பது இரத்தத்தை குறிக்கக்கூடிய கிரகம், செவ்வாய் பாதிக்கப்பட்டிருந்தால், ஒருவரின் இரத்தம் சுத்தமில்லாதவர் என அர்த்தம்..

        செவ்வாய்தோஷம் இருபவருக்கு இரத்தமானது எதிர்மறை(-ve) வகையை சார்ந்ததாக இருக்கும். குறிப்பாக(O- ve) இரத்தம் உள்ளவர்கள் செவ்வாய்தோஷமுள்ளவர்கள்.. ஏனெனில் இது அரியவகை இரத்தமாகும்.
     
        மருத்துவம் என்ன கூறுகிறது என்றால், சில இரத்த வகையை சேர்ந்தவர்கள் இந்த இரந்த வகையுடன்தான் சேர வேண்டுமென கூறுகிறது...அதாவது,-ve இரத்தவகையை சேர்ந்தவர்கள் அதே -ve இரத்தவகையை சேர்ந்தவர்களுடன்தான் இணைய வேண்டுமென மருத்துவ ஆராய்ச்சி கூறுகிறது.. அது ஆராய்ச்சியா என தெரியவில்லை..ஆனால் நம் சாஸ்திரத்திலிருந்து திருடியது என்பததே நிதர்சனமான உண்மை..

       இந்த தோஷம் உள்ளவர்கள், தனிமை விரும்பியாகவும், அதிகோபமுடையவர்களாகவும், உடல் மற்றும் இரத்தம் சூடு உடையவர்களாகவும் இருப்பார்கள்..

      இந்த தோஷமுள்ளவர்களுடன் இணைந்தால், உங்கள் துணைக்கோ இல்லை வாரிசுக்கோதான் பாதிப்பு...இதை நான் கூறவில்லை...உங்களின் அறிவியல் மற்றும் மருத்துவ.ஆராய்ச்சிதான் கூறுகிறது

Comments

Popular Posts