கவியின் கருவில் வந்த காதல்♥♥♥
கவியின் கருவில் வந்த காதல்♥♥♥
ஒரு மலைக்கிராமத்தில் மாயவன் எனும் விவசாயி வாழ்ந்து வந்தார். அவருக்கு சிறுவயதிலிருந்தே பகவான்ஸ்ரீகிருஷ்ணரின் மீது பேரன்பு...
மாயவனுக்கு அகல்யா எனும் மனைவி இருந்தார். அகல்யா 5 மாதக்கருவை சுமந்து கொண்டிருந்தார்.
அகல்யாவின்மீது அதிக அன்பு கொண்ட.மாயவன்.அவரை பக்குவமாக பார்த்துக் கொண்டார் தாய்போல...
தினமும் மாலை வேலையை முடித்துவிட்டு அகல்யாவை அமர வைத்து அவருக்கும் கருவிலிருக்கும் சிசுவிற்கும், ஸ்ரீகிருஷ்ணரின் கதைகளை சொல்வார். இக்கதையை கேட்டு கரு வளர ஆரம்பிக்கிறது.
அகல்யாவின் பிரசவகாலமும் வந்தது. பல தடைகள் தாண்டி ஆண்குழந்தையும் பிறந்தது. அனைவரும் எதிர்பார்த்தபடி ஸ்ரீகிருஷ்ணரின் பெயரை தன் மகனுக்கு வைத்தார்.
கண்ணன் என பெயர் கொண்ட அக்குழந்தையை பாகவன் ஸ்ரீகிருஷ்ணராகவே வளர்த்தார்.அக்குழந்தையும் அவ்வாறே வளர..கண்ணனை போல குறும்பும் செய்தது. மூன்று வருடங்கள் ஆகியும் கண்ணனுக்கு பேச்சு வரவில்லை..
அனைத்து மருத்துவர்களையும் ஆலோசித்தும் விடை கிடைக்கவில்லை..
அழுது கொண்டே கணவனும் மனைவியுமாக பகவானை வேண்ட...
திடீரேன "ராதா" எனும் குரல் கேட்டது.
நிங்கள் நினைத்தது சரிதான் அது கண்ணனின் குரலே..கருவிலேயே ராதாவின் காதல் கதையை கேட்டதால், ராதையின்மீது அதிக அன்பு ஏற்பட்டது.
கண்ணன் வளர வளர ராதையின்மீதுள்ள அன்பும் தேடலும் அதிகமாயிற்று. தன்னை சுற்றி பல நண்பர்களிருந்தும் அவரின் சோகம் தனியவில்லை. இது அகல்யாவின் மனதினையும் பாதித்தது. மீண்டும் பகவானை நோக்கி வேண்டுகிறார்.
கண்ணன் வாழ்ந்த அதே கிராமத்தில் சந்திரன் என்பவரும் வாழ்ந்து வந்தார். அவர் கண்ணனை போல அழகான அறிவான மகன் வேண்டுமென தன்னுடைய கருவிற்கும் கண்ணின் கதை சொல்ல, கண்ணா என அழைத்தபடி ராதை இந்த பூமியில் கால் பதித்தாள்.
சோகத்திலிருந்த கண்ணனின் முகம் திடீரேன புன்னகைத்தது.கண்ணனை நினைத்து ராதாவும், ராதாவை நினைத்து கண்ணனும் வாழத் தொடங்கினர்.
ஒருநாள் ஊரில் கிருஷ்ண ஜெயந்தி.விழா நடக்க, கண்ணன் பகவான் ஸ்ரீகிருஷ்ணரை போல வேடமிட்டு வந்தார். ஊரில் அனைத்து பெண்களின் கண்களும் கண்ணன்மீதுபட்டது. ஆனால் கண்ணன் மனம் ராதாவை நோக்கியே...
திடீரேன ராதா என யாரோ அழைப்பது போல தோன்ற கண்ணனின் கண்கள் தேட ஆரம்பித்தன..அவரும் சுற்றித் சுற்றித்தேட எதிரே வந்த பெண்ணின்மீது மோதினார். இருவரும் கீழே விழ அவளை கண்ணன் பார்க்க,
இத்தனை அழகை பார்த்திராத கண்ணன், அவளை பார்த்ததும் சற்றுநேரம் பேசாமல் அவள் கண்களை பார்க்க...கண்ணன் ராதா என அழைத்தார். சொல் கண்ணா என ராதா சொல்ல...இனிதே ராதாகிருஷ்ணரின் காதல் இணைந்தது.

Comments
Post a Comment